பா.ம.க சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .!
தென்காசி

பா.ம.க சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!
தென்காசி ஏப்.14
டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க வினர் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினர்.
இந் நிகழ்ச்சிக்கு தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். தென்காசி பா ம க வடக்கு மாவட்ட செயலாளர் சீத்தாராமன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேது ஹரிகரன்,சாகுல் ஹமீது மாவட்டத் தலைவர் குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் துணைத் தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் சுசி சுந்தர் கிருஷ்ணன் தென்காசி நகர தலைவர் பழனி குமார் சிறுபான்மை பிரிவு தலைவர் கெய்சன் செங்கோட்டை நகர செயலாளர் அபு,செங்கோட்டை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து தென்காசி ஒன்றிய தலைவர் கருப்பசாமி தென்காசி ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம் பேரூர் தலைவர் அப்துல் மஜீத் அச்சன்புதூர் மூக்கையா பாலு பேமஸ் அப்துல் மஜீத் ,இலத்தூர் இசக்கி, செங்கோட்டை சாமுவேல் மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்