கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம். கூட்டத்தில் சட்ட மன்ற தேர்தலில் உள்ளுர் நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகர தலைவர் லலித் ஆண்டனி முன்னிலை வகித்தார்.
மேலும் இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அக கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுசெயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவர்களான எல்.சுப்பிரமணியன், ராஜா குமாரவேல், ஜேசுதுரைராஜ், நாராயணமூர்த்தி, காசிலிங்கம், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாவித்கான், முன்னாள் எஸ்.சி.எஸ்.டி. மாநில பொதுச் செயலாளர் ஆறுமுக சுப்பிரமணி, அகில இந்திய கமிட்டி உறுப்பினர் குமரேசன், சேலம் மண்டல ரயில்வே குழு உறுப்பினர் தளபதி ரகமத்துல்லா ஆகியோர் கூட்டத்தில் நிறைவேற்றப்ட உள்ள தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.
இந்த கூட்டத்தினைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 6 தொகுதிகளில் எந்த தொகுதியாக இருந்தாலும் சீட் வழங்குவது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருக்கே சீட் வழங்க வேண்டும். வேறு மாவட்டமோ அல்லது வேறு மாநிலத்தில் இருந்து வேட்பாளர்களை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவிக்கக் கூடாது மண்ணின் மைந்தர்யாக யாராக இருந்தாலும் அவர்களை வெற்றி பெறச் செய்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் கரத்தினை வலுப்படுத்த பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர்களான, நஞ்சுண்டன், தனஞ்செயன், நாராயண மூர்த்தி, சித்திக், அயோத்தி, நகர தலைவர்கள் ஸ்ரீராம், யுவராஜ், விஜயகுமார், இளைஞர் அணி தலைவர் சத்திய மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் வினாயகம், முன்னாள் நகர தலைவர்கள் வின்சென்ட், ரமேஷ்அர்னால்ட், டாக்டர் தகி
மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்சல், வாஜித் பாஷா, கமலக்கண்ணன், குட்டி, பாண்டுரங்கன், முன்னாள் ஊத்தங்கரை சேர்மன் பூபதி, முன்னாள் அரசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், சக்கரவர்த்தி, இளைஞர் காங்கிரஸ் சக்திவேல், மாரியப்பன், மீனவரணித் தலைவர் செல்வம், முனீர் உள்ளிட்ட பலர் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
