கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், 286 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன்  ஒப்புதல் ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி

கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், 286 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன்  ஒப்புதல் ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பாக, கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், 286 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன்  ஒப்புதல் ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர்  வழங்கி கலைஞர் கைவினை திட்டம் குறித்த வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டனர்.

உடன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் எம்.சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ