தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பெரியகோட்டப்பள்ளி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் மற்றும் வரவு, செலவு கோப்புகளை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்வையிட்டார். !
கிருஷ்ணகிரி
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பெரியகோட்டப்பள்ளி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் மற்றும் வரவு, செலவு கோப்புகளை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பார்வையிட்டு, வரவு செலவு கோப்புகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் ஊராட்சி செயலாளரை பாராட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கோட்டப்பள்ளி ஊராட்சியின் மூலமாக செயப்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல் கேட்டறிந்தார்.
இதனை அடுத்து கிருஷ்ணகிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் உத்தரவின் பெயரில் பெரியகோட்டப்பள்ளி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வரவு செலவு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை டாக்டர் சந்திரமோகன் பார்வையிடலாம் என்று தெரிவித்து இருந்தார்.
இதன்படி டாக்டர் சந்திர மோகன், ஊராட்சி செயலாளர் வேலன் முன்னிலையில் திட்டப்பணிகள் மற்றும் வரவு, செலவு கோப்புகள் அனைத்தையும் பார்வையிட்டார். அப்போது ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை, தெரு விளக்கு அமைத்தல், கிராம சாலை அமைத்தல், குடிநீர் இணைப்பு ஊராட்சி செயலாளரின் மாதஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை பார்வையிட்டார்.

பின்னர் பெரியகோட்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வரவு செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேட்கப்பபட்டது. இதில் நான் கேட்டு இருந்த தகவல் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் பெரிய கோட்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட
ஐயர் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இந்த சாலைகள் விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் துணைத் தலைவர் ஜெய்சன், சூளகிரி ஒன்றிய சமுக நுகர்வோர் பாகாப்பு நல சங்கத்தின் தலைவர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
