கிருஷ்ணகிரி மாவட்டம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவக்கு சிறப்பான வரவேற்பு அழித்திட வேண்டும் - பி.சி.சேகர். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் வருகை தரும் புதிய கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி. ரகுவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்திடும் வகையில் பெரும் திரளாக அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவருமான பி.சி. சேகர் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,...

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக எம்.சி. இரகுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவின்படி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, எதிர்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக புதியதாக நியமானம் செய்யப்பட்டுள்ள எம்.சி,இரகு முதல்முறையாக வருகின்ற 23- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
இதன் முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒப்பதவாடி பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பர்கூர் நகரில் உள்ள அன்னை இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து 11.00 மணிக்கு கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் பிற்பகல் 1.00 மணியளவில் காவேரிப்பட்டினம் நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்,
தொடர்ந்து 2.00மணிக்கு போச்சம்பள்ளி நகரில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் 4.00 மணியளவில் ஊத்தங்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதோடு மாலை 5.00 மணிக்கு மத்தூர் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
ஆகையால் இந்த நிகழ்ச்சிகு அந்தந்த வட்டார தலைவர்கள், நகரத் தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு புதிய மாவட்டத் தலைவர் எம்.சி இரகு அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கிழக்கு மாவட்டத் துணைத்தலைவர் பி.சி.சேகர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்
மாருதி மனோ
