கிருஷ்ணகிரி பழையபேட்டையில் மகாத்மா காந்தி வந்து சென்ற இடத்தில் அவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள  இடத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது,!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் மகாத்மா காந்தி வந்து சென்ற இடத்தில் அவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள  இடத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது,!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி. இரகு, மகாத்மாகாந்தி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து இந்த நாளில் தான் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து, இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறியதை நினைவுகூர்ந்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 77வது குடியரசு தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி பழையபேட்டையில் மகாத்மா காந்தி வந்து சென்ற இடத்தில் அவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள  இடத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது,

இந்த விழாவிற்கு மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்களான ஏகம்பவாணன், ராஜேந்திர வர்மா, கிராம கமிட்டி பொறுப்பாளர் அக, கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி சேகர், முன்னால் மாவட்டத் தலைவர்கள் ராஜா குமாரவேல், நாரயண மூர்த்தி, முன்னால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ரகமத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி, கவுன்சிலர் வினாயகம், கிருஷ்ணகிரி கிராம கமிட்டி பொறுப்பாளர் டாக்டர் தகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த குடியரசு தின விழாவிற்கு தலைமை வகித்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி. இரகு, அகிம்சை வழியில் வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தியின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடி கம்பத்தில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் இந்த நாளில் தான் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து, இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறியதை நினைவு கூர்ந்தார். இதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாப்பட்டது.

மேலும் இந்த விழாவின் போது முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வின்சென்ட், முபாரக், இருதயம், ரமேஷ், பர்கூர் தொகுதி பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சக்திவேல், நகர தலைவர் ஸ்ரீராம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்சல், முனீர், சித்திக், ஹரி, மாரியப்பன், வாஜீத் பாஷா என
ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ

.