தூத்துக்குடி மாணவி வழக்கில் கைதான நபர் மருத்துவமனையில் அனுமதி.!

குற்றம்

தூத்துக்குடி மாணவி வழக்கில் கைதான நபர் மருத்துவமனையில் அனுமதி.!

தூத்துக்குடி மாவட்டம் விளாட்டிக்குளம் அருகே கடந்த 10ஆம் தேதி இயற்கை உபதை கழிப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசர் குற்றவாளிகளை தேடி வந்த வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேடநத்தம் கிராம சம்பவம் நடந்த காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர் அதில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் கடந்த பத்தாம் தேதி மாலை 5:21 மணிக்கு காட்டுப்பகுதி நோக்கி செல்வது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த இருசக்கர வாகனத்தின் எண்ணைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில், அந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்தது.

இதை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தனிப்படை காவல்துறையினர் தற்போது மாணவியை கொலை செய்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரனை இன்று தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்திற்கு கையெழுத்து போடுவதற்காக வந்த நிலையில் கைது செய்துள்ளனர். ஒன்பது நாட்கள் கழித்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்த குற்றவாளியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நள்ளிரவில் திடீர் என்று அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதை அடுத்து தர்ம முனீஸ்வரன் எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது போலீசார் தர்ம முனீஸ்வரனை மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .

விளாத்திக்குளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR ) 

விளம்பரம் மற்றும் செய்தி சேனல் வளர்ச்சிக்கு உதவ விரும்பும் வாசக பெருமக்கள் அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்

G Pay 

94 42 99 90 74