பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வர்த்தகர் அணி செயலாளர். !
கிருஷ்ணகிரி
பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளினை யொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் நேரில் சென்று தனது பிறந்த நாள் நல் வாழ்த்தினை தெரிவித்தார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் தேமுதிக வினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளினை யொட்டி தேமுதிக-வினர் கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவதோடு நேரில் சென்று தங்களது பிறந்த நாள் வாழ்த்தினையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதேபோல கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வர்த்தக அணி செயலாளர் கே. விஜயகாந்த், சென்னையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சென்று தனது பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
