கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரி வளாகத்தில், மார்ச்-15 நுகர்வோர் தினவிழா .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம். கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரி வளாகத்தில், மார்ச்-15 நுகர்வோர் தினவிழா மற்றும் உணவு பாதுகாப்புத் துறையின் உணவுக் கலப்படம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் திருமதி.உமா அவர்கள் தலைமையேற்றார். பேராசிரியர் திருமதி கனகலட்சுமி அவர்கள் வரவேற்று பேசினார். கிருஷ்ணகிரி வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதி. நுகர்வோர் விழிப்புணர் நல சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் ஏஜி.ஜாய் சேலம் உணவு பகுப்பாய் அலுவலர் திரு.கார்த்திகேயன் என கலந்து கொண்டனர்.
உணவு பாதுகாப்பு அலுவலர். ஜனகர் ஜோதி பேசுகையில்..... உணவில் உள்ள சோதனைகள் உணவில் கலப்படங்கள், தற்போதைய துரித உணவுகள் மற்றும் அசைவ, சைவ உணவுகளில் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் மற்றும் மசாலாக்கள் அடங்கியுள்ள மோசமான பகுதி பொருட்கள் குறித்தும், அவற்றை அடையாளம் காண கலப்படம் அறிதல் குறித்து விழிப்புணர்வு செய்முறை விளக்கம் படங்கள் மற்றும் செய்முறை வாகனம் கல்லூரி வளாகத்தில், விழிப்புணர்வுக்காக, நிறுத்தப்பட்டுள்ளது எனவும், அதில் அறிந்து நாம் நம் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமையும் எனவும்,பல்வேறு தகவல்களை பேசினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் கீழாக, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட ஆலோசனை குழு கூட்ட உறுப்பினர் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர் ஜாய் பேசுகையில்.....
நுகர்வோர் இயக்கம் நமது இந்திய நாட்டில் 1986-டிசம்பர் -24ஆம் ஆண்டு மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது அந்த நாளையே தேசிய நுகர்வோர் தினமாகவும், மார்ச் 15- உலக நுகர்வோர் தினமாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டு கொண்டாடப்பட்ட வருகிறது. நுகர்வோர்கள் தங்களுடைய உணவு சார்ந்த பொருட்களை அணுகும் பொழுது, அவற்றின் காலாவதி, தயாரிப்பு தேதி, எடை அளவு, பகுதி பொருட்கள் தயாரிப்பாளர் விலாசம் போன்றவை கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டும். பால் பொருட்களில் கவனம் செலுத்தவும் மற்றும் உணவு கலப்படங்கள் பெருகி இன்றைய நாட்களில் புற்றுநோய்கள் அதிகமாக உண்டு பண்ணுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் வருடத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புற்றுநோயாளிகளை அரசு தரவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறது. இதில் 70% உணவுப் பொருட்களாலேயே உண்டு பண்ணுகிறது. எனவும் மீதம் 30%சதவீதம் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளான குட்கா, பான்பராக், மது போன்றவைகளால் இருப்பதை சுட்டிக்காட்டி உணவு பொருட்களை நாம் அன்றாடம் வாழ்க்கையில் அணுகும் பொழுது கலப்படத்தை அடையாளம் காண வேண்டும். அதற்கான செய்முறை விளக்கங்களும் தற்போது காண்பிக்கப்படும்.
மேலும் ஐஸ்கிரீம், துரித உணவு, மீன் இறைச்சி கடைகள், சவர்மா இறைச்சி உணவு, மளிகை பொருட்கள் போன்றவற்றில் தற்போது கலப்படங்கள், நிறமூட்டிகள், உணவு பாதுகாப்பு தரங்கள் விதிகள் கீழாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது கல்லூரியில் மாணவியர்கள் உணவு குறித்த கலப்படங்கள் அறியப்படுமானால் தமிழகம் முழுமைக்கும் நேரடி கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்ணான 9444042322 என்ற தொடர்பு எண்ணிலும், வாட்ஸ் அப் செய்ய முடியும் TAMIL NADU FOOD SAFETY -APP மூலமாகவும் புகார்களை பதிவு செய்ய முடியும். இந்த புகார்கள் ரகசியம் காக்கப்படும் கொடுக்கப்பட்ட புகார்கள்-24 மணி நேரம் முதல் -48 மணி நேரங்களுக்கு உள்ளாக நடவடிக்கை மேற்கொண்டு புகார் கொடுப்பவருக்கு அதற்குரிய தகவல் வழங்கப்படும் என, தகவல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சேலம் மண்டல உணவுப் பகுப்பாய்வு அமைவனத்தின் அலுவலர் கார்த்திகேயன் அவர்கள் பல்வேறு உணவுப் பொருட்களை பட்டாணி, கடுகு, பால், டீ தூள், போட்டி, பயறு வகைகள் மற்றும் பல உணவுப் பொருட்களை அதற்கான கலப்படங்களை விவரித்து விளக்கி செய்து காண்பித்தும், உணவு பகுப்பாய்வின் வாகனத்தில் விளக்க படங்களும், தகவல்களும் உள்ளது எனவும் சுட்டிக்காட்டி நிகழ்ச்சி நிறைவுற்றது.
செய்தியாளர்
மாருதி மனோ
