அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனை பேருந்து நிறுத்தம் முன்பு சிற்றுந்து (மினி பஸ்) ஆட்டோ ஓட்டுனர்களால் சிறைபிடிப்பு.!

கிருஷ்ணகிரி

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனை பேருந்து நிறுத்தம் முன்பு சிற்றுந்து (மினி பஸ்) ஆட்டோ ஓட்டுனர்களால் சிறைபிடிப்பு.!

கிருஷ்ணகிரி அருகே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனை பேருந்து நிறுத்தம் முன்பு சிற்றுந்து (மினி பஸ்) ஆட்டோ ஓட்டுனர்களால் சிறைபிடிப்பு, ஆட்டோவில் தான் செல்ல வேண்டும் என பேருந்தில் இருந்து பயணிகளை கீழே இறக்கிகியதால் பரபரப்பு.

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் புதிய விரிவான மினி பேருந்து திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி நகரில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

ஆட்டோக்களில் ஒரு ஷேர் சவாரிக்கு கிருஷ்ணகிரியில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ வாடகை 250 ரூபாயும், ஷேர் ஆட்டோவில் 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் புதியதாக விடப்பட்ட மினி பேருந்துகளில் பயண கட்டணம் 5 மற்றும் 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அந்த குறைந்த கட்டணம் என்பதால் பெரும்பாலும் அதிகபடியான மக்கள் மினி பேருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் கிருஷ்ணகிரியில் இருந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வரும் மினி பேருந்துகளை போலுப்பள்ளி என்ற இடத்தில் வழி மறித்து ஆட்டோக்களை பேருந்து முன்பு நிறுத்தி மினி பேருந்துகளில் பயணித்த பயணிகளை கட்டாயப்படுத்தி கீழே இறக்கி ஆட்டோக்களில் தான் பயணிக்க வேண்டும் எனவும் மினி பேருந்துகள் இந்த வழி தடத்தில் இயக்கக்கூடாது என கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே மினி பேருந்து இயக்குபவர்கள் சார்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மினி பேருந்துகளை இயக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ