நீலாங்கரையில் 4,044-மாணவர்களுக்கு தமிழக அரசின் 'உலகம் உங்கள் கையில்' மடிக்கணினி வழங்கும் மாபெரும் விழா.!

சென்னை

நீலாங்கரையில் 4,044-மாணவர்களுக்கு தமிழக அரசின் 'உலகம் உங்கள் கையில்' மடிக்கணினி வழங்கும் மாபெரும் விழா.!

நீலாங்கரையில் 4,044-மாணவர்களுக்கு தமிழக அரசின் 'உலகம் உங்கள் கையில்' மடிக்கணினி வழங்கும் மாபெரும் விழா!

மா. சுப்பிரமணியன் -ச.அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு!

தமிழக அரசின் 'உலகம் உங்கள் கையில்' எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 13,14 மற்றும் 15 உள்ளடங்கிய 27 கல்வி நிறுவனத்தில் பயிலும் 4,044 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர். கே. கன்வென்ஷன் அரங்கில் மண்டல குழத் தலைவர்கள் எஸ. வி.. ரவிச்சந்திரன், வி.இ. மதியழகன் ஆகியோர் ஒருங்கிணைப்பில்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் உரையாற்றிய அமைச்சர்:-


தமிழகத்தில் உயா் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு சலுகைகள் என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இந்திய அளவில் உயா் கல்வி சோ்க்கையில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
அந்த வகையில், புதிதாக தொடங்கப்பட்ட 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் வாயிலாகதகவல், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ், கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்பட பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு மொத்தம் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இந்த மடிக்கணிகளின் வாயிலாக மாணவா்கள் தொழில்நுட்ப அறிவையும், தனித்திறன் சாா்ந்த தகவல்களையும் பெற்று பயனடைய வேண்டும் என கேட்டு கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

மடிக்கணினி பெற்ற கல்லூரி மாணவ,மாணவிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு  தமிழக முதல்வருக்கு  நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

இவ்விழாவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர். ச. அரவிந்த்ரமேஷ், மண்டலக் குழு தலைவர்கள்.எஸ்.வி. ரவிச்சந்திரன்,வி.எ.மதியழகன்,, 
பெருநகர சென்னை மாநகராட்சி 199 வார்டு உறுப்பினர். ஜி.சங்கர்.194,வார்டு உறுப்பினர்.க. விமலாகர்ணா, 200 வார்டு உறுப்பினர் ஏ. முருகேசன்,14 &15 மண்டல மாநகராட்சி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், மற்றும் 27 கல்லூரி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களும பங்கேற்று பயன்பெற்றனர்

செய்தியாளர்

    சுகுமாரன்