ஆள் மாறாட்டம் செய்து போக்குவரத்து துறையில் பணிக்கு சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார். !

சென்னை

ஆள் மாறாட்டம் செய்து போக்குவரத்து துறையில் பணிக்கு சேர்ந்து 83 லட்சம் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி தவறான லாபம் அடைந்த நபர் மீதும் அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளும் தாம்பரம் உதவி ஆணையர், குரோம்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாம்பரம் காவல் ஆணையரிடம் புகார். 

சென்னை குரோம்பேட்டை, சாஸ்திரி காலனியை சேர்ந்தவர் லாசர்(53), இவரது தந்தை பெயர் கித்தேரி தாஸ் போக்குவரத்து துறையில் ஊழியராக பணியாற்றி வந்தவர், கடந்த 06-01-1970 ஆம் ஆண்டு உயிரிழந்தார். 

அவர் உயிரிழந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அருள் தாஸ் என்பவர் அவரது பெயரை மைக்கேல் தாஸ் என மாற்றிக் கொண்டு அதே போல் அவரது தந்தை பெயரையும் சூசைய நாதனை மாற்றி கித்தேரி தாஸ் என மாற்றி, வாரிசு தாரராக ஆவணங்கள் போலீயாக உருவாக்கி, அரசு அதிகாரிகளை ஏமாற்றி அரசு பணியில் சேர்ந்துள்ளார். 

மேலும் கித்தேரி தாஸுக்கு வந்த ஊக்கத் தொகையையும் அபகரித்துக் கொண்டுள்ளார். இதுவரை அரசுப்பணியில் சம்பளமாக 93 லட்சமும், ஓய்வூதியமாக 14 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளார். இது குறித்து லாசர் கேட்டதற்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

எனவே இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் குரோம்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் சசிகலா, உதவி ஆய்வாளர் காயத்ரி, தலைமை காவலர் இந்திரா தேவி, மற்றும் தாம்பரம் சரக உதவி ஆணையர் நெல்சன் ஆகியோர் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறையாக புகாரை விசாரிக்காமல் பல ஆண்டுகளாக அலைகழிப்பதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் லாசரின் மகள் செல்வராணி புகார் மனு அளித்துள்ளனர். 

உரிய நடவடிக்கை எடுத்து போலீயாக ஆள் மாறாட்டம் செய்து அரசு பணி செய்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாசரின் மகள் செல்வராணி பேட்டியளித்துள்ளார்.

செய்தியாளர்

            S S K