எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு கடைகளுக்கு முன் கம்புகள் கட்டி ப்ளக்ஸ் - மாற்றுத்திறனாளி புகார். !
தென்காசி
எடப்பாடி வருகை குற்றாலத்தில் கடை முன்பு கம்புகள் கட்டி பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளி காவல் நிலையத்தில் புகார் மனு
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்கும் விதமாக ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகள் வைத்து வருகின்றனர்.
அதில் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடம் அருகில் மாற்றுத் திறனாளியின் கடை முன்பு கம்புகளை கட்டி உள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை முத்துமாரி என்பவர் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் மாற்றுத்திறனாளி பெட்டிக்கடை வைத்துள்ளேன்.
எனது மாற்றுத் திறனாளி பெட்டிக்கடை வாசல் முன்புறம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி விளம்பர போர்டு வைப்பதற்காக மாற்றுத்திறனாளியாகிய எனது கடையின் முன்பாக வியாபாரத்திற்கு இடைஞ்சலாக கம்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனை பேரூராட்சி மற்றும் கவுன்சிலரிடம் கூறிய போது தகாத வார்த்தையால் பேசினார்கள்.ஆகவே என்னை மிரட்டியவர்கள் மீது மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016 இன் படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்
AGM கணேசன்
