கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி .!
தென்காசி

கடையநல்லூரில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
தென்காசி ஜூலை 14
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்துள்ள முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாதகால பிரச்சார செயல் திட்ட பணிகள் தொடர்பாகவும் அக்டோபர் 5 ல் மதுரையில் திட்டமிடப்பட்டுள்ள இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாடு குறித்தான விழிப்புணர்வு பிரச்சார திட்டமிடல்கள் குறித்தான தென்காசி மாவட்ட அனைத்து கிளைகளின் அணி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் தரமணி யாசர் கலந்துகொண்டு உரையாற்றினார்.அவர் தனது உரையில் அணி நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய களப்பணிகள் தொடர்பாகவும் நன்மையை நோக்கி மக்களை அழைக்கும் பணியானது இறைவனிடத்தில் வெற்றியை பெற்றுத் தரும் எனவும் சமீப காலங்களில் இளைஞர்களிடையே ஊடுறுவியுள்ள போதை பழக்கங்களின் தீமைகள் குறித்தான விழிப்பணர்வுகளையும் கல்வியை நோக்கி அவர்களை அழைக்கும் விதமான பணிகளை அணி நிர்வாகிகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாட்டில் இரத்ததானத்தில் கடந்த பல வருடங்களாக முன்னனியில் இருப்பதை சுட்டிக் காட்டியதோடு இன்னமும் அதிகமாக உயிர் காக்கும் உன்னத பணியான குருதிக் கொடை குறித்தான விழிப்புணர்வினை ஏற்ப்டுத்த வேண்டுமென தெரிவித்தார் .
முன்னதாக மாவட்ட தொண்டரணி செயலாளர் ஷேக் தாவூத் தொண்டரணியின் பணிகள் குறித்தும் ,மருத்துவ அணிச் செயலாளர் அப்துல்லாஹ் மருத்துவ அணியின் பணிகள் குறித்தும் , மாணவரணி செயலாளர் ரபீக் ராஜா கல்வி பணியில் மாணவரணியின் பங்கு குறித்தும் மாவட்ட துணை தலைவர் அப்துல் பாஸித் சமூக வலைதளங்களில் I T Wing ன் அவசியம் குறித்தும் பேசினர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் பீர் முஹம்மது , முஹமதலி பிலால், மாவட்டத்தின் அனைத்து கிளைகளின் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் முடிவில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் பாசித் நன்றிகூறினார் நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை மாவட்ட தொண்டரணியினருடன் கடையநல்லூர் டவுண் கிளை தொண்டரணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்