குற்றாலத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் .! போலீசார் தீவிர விசாரணை. !
தென்காசி
குற்றாலத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
யார் அவர்? போலீசார் தீவிர விசாரணை
தென்காசி,டிச - 09
தென்காசி மாவட்டம், குற்றாலம், புலியருவி பகுதியில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது . தகவலறிந்த குற்றாலம் காவல் துறையினர் அந்த சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் குற்றாலம் புலியருவி அமைந்துள்ளது. புலியருவி பகுதிக்கு அருகே உள்ள தனியார் தோப்பில்,& வழக்கம்போல அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயி பணிக்காக வேலை செய்ய சென்றுள்ளனர்.
அப்போது வீசிய துர்நாற்றத்தின் காரணமாக அப்பகுதியில் நோட்டமிட்ட போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் குற்றாலம் காவல் துறைக்கும் வனத் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர் அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து வந்த குற்றாலம் காவல் துறையினர் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு தலைமை மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் அவர் யார் எந்த ஊரைச் சார்ந்தவர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதம் எதுவும் நடைபெற்று உள்ளதா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்
AGM கணேசன்
