தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சலீம், நோய் கண்டறியும் கருவிகள் வாங்க கோரிக்கை மனு .!

தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சலீம், நோய் கண்டறியும் கருவிகள் வாங்க கோரிக்கை மனு .!

தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சலீம், நோய் கண்டறியும் கருவிகள் வாங்க கோரிக்கை மனு 

தென்காசி அக் 08

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லினிடம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சலீம் நோய் கண்டறியும் கருவிகள் வாங்க கோரி கோரிக்கை மனுவினை அளித்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, தென்காசி மாவட்டம்,  தனி மாவட்டமாக அரசு அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை நோய் கண்டறியும் கருவிகள் மருத்துவமனையில் இல்லை. மேலும் பல கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகிறார்கள். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள்.

அதனால் அவசர நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவல நிலையில் இருக்கிறார்கள். ஆகையால் அரசிடம் பரிந்துரை செய்து நோய் கண்டறியும் கருவிகளும், போதிய மருத்துவர், மற்றும் செவிலியர்களை பணி அமர்த்தி ஒரு சிறப்புமிக்க தரம் உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர்கள் ரஷீத் கான், காஜா மொய்தீன், பொதுச் செயலாளர் சர்தார்,நகர தலைவர் ஜேக்கப் அருணோதயம் முகமது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்