தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் ராவ் பகதூர் ரத்தினசாமி நாடார் 161 வது பிறந்தநாள் நிகழ்ச்சி ."

தென்காசி

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் ராவ் பகதூர் ரத்தினசாமி நாடார் 161 வது பிறந்தநாள் நிகழ்ச்சி ."

,தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் ராவ் பகதூர் ரத்தினசாமி நாடார் 161 வது பிறந்தநாள் நிகழ்ச்சி

தென்காசி செப் 28

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நாடார்களின் வளர்ச்சி பாதைக்கு வித்திட்ட ராவ்பகதூர் இரத்தினசாமி நாடார் அவர்களின் 161 வது பிறந்தநாளில் அலங்கரிக்கப்பட்ட அவருடைய திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு நிர்வாகிகள்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது 

1910 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள நாடார் சமுதாய பெரியவர்களை தனது சொந்த செலவில் ஒன்று சேர்த்து  நாடார் சமுதாயத்தின் முதல் மாநாட்டை மயிலாடு துறை அருகே உள்ள பொறையாரில் நடத்தினார்.

ராவ் பகதூர் இரத்தின சாமி நாடார் இந்த மாநாட்டில் தான் நாடார் மகாஜன சங்கம் தொடங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து 1921 ஆம் ஆண்டுக்கு முன்பு நாடார்களை சாணார்கள் என்றும் இன்னும் பல உட்பிரிவுகளை பெயர்களாக கொண்டு அழைத்தார்கள்.

சாணார் என்பது இழிச்சொல் என்று அன்றைய மக்கள் கருதிய காரணத்தினால் 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய போது நாடார் சமுதாயத்தில் உள்ள உட்பிரிவுகளை எல்லாம் ஒன்று சேர்த்து நாடார் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை இரத்தினசாமி நாடார் கேட்டுக் கொண்டார்.

இதன் அடிப்படையில் 1921 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம்  தேதி அன்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நாடார் என்று அரசாணை வெளியிட்டார்கள் நாடார் என்ற அரசாணையை பெற்றுக் கொடுத்த ராவ் பகதூர் இரத்தினசாமி நாடார் அவருடைய பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்து பெருமை கொள்வோம் என்று பேசினார்.

இந் நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கொட்டாகுளம் கணேசன், கடையநல்லூர் ஒன்றிய துணை தலைவர் சக்திவேல், வழக்கறிஞர் கணேஷ்குமார், மாடசாமி, வெள்ளை பாண்டி,  முருகையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்