குற்றாலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய நியாய விலை கடை .!
தென்காசி
குற்றாலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய நியாய விலை கடை
பழனிநாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்
தென்காசி செப் 10
குற்றாலத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடை பெற்றது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில், தென்காசிசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 17.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது..
இந் நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ். பழனி நாடார் தலைமை வகித்து புதிய கடையினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம். கணேசன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், குற்றாலம் அறங்காவலர் குழு உறுப்பினர் வீரபாண்டியன், குற்றாலம் பேரூர் காங்கிரஸ் தலைவர் துரை, ஐ என் டி யு சி நயினார் சாமி, ஆறுமுகம், முருகன், பாண்டி, குளத்தூரான், பிரபாகரன், அரவிந்த், செண்பகம், காளிராஜ், சுடலைமுத்து, அழகப்பபுரம் ஐயப்பன், பர்னபாஸ், ஒப்பந்ததாரர் ஜெய் சிங், மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
