தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் .!
தென்காசி
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்
தென்காசி ஆகஸ்ட் 25
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாதகால பிரச்சார செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில் கடையநல்லூரில் டவுண் மர்க்கஸில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் பொருளாளர் அன்வர் சாதிக் துணைத் தலைவர் அப்துல் பாஸித் துணை செயலாளர்கள் ஹாஜா மைதீன், பீர் மைதீன்,செய்யதலி, அப்துல் பாசித், முஹமது அலி பிலால், மற்றும் மருத்துவ அணி அப்துல்லாஹ் குட்டி மாணவரணி ரபீக் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


இந்த கருத்தரங்கில் மாநில துணை பொதுச் செயலாளர் மயிலை அப்துர் ரஹீம் மாநில செயலாளர் அல் அமீன் ஆகியோர் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தினர்
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு நன்நெறியுடன் கூடிய சமுதாய பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக உபதேசங்கள் வழங்கப்பட்டது மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி வகுப்பு
நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை மாவட்ட தொண்டரணி செயலர் ஷேக் தாவூத் தலைமையிலான தொண்டரணியினருடன் கடையநல்லூர் டவுண் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
