கடையநல்லூர் டாக்டர் சிங்கப்பூரில் எம். பி. தேர்தலில் வெற்றி.!

தென்காசி

கடையநல்லூர் டாக்டர் சிங்கப்பூரில் எம். பி. தேர்தலில் வெற்றி.!

கடையநல்லூர் டாக்டர் சிங்கப்பூரில் எம். பி. தேர்தலில் வெற்றி

தென்காசி மே 5

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வம்சாவழித் தமிழர் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்
சிங்கப்பூரில் 2025 ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் PAP கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளாராக சிங்கப்பூரின் ஜூரோங் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் இந்திய வம்சாவழி தமிழரான கடையநல்லூர் டாக்டர் ஹமீத் ரசாக் வெற்றிபெற்று சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்

டாகடர் ஹமீத் ரசாக் சிங்கப்பூரின் புகழ்பெற்ற எலும்பு அறுவைசிகிச்சை மருத்துவர் ஆவார்
டாக்டர் ஹமீத் ரசாக் எம்.பியாக வெற்றி பெற்ற நிலையில் கடையநல்லூர் பகுதியில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

செய்தியாளர்

AGM கணேசன்