நேற்று கரூர் கூட்டம் நடந்த இடத்தை விட.. சிறிய இடம் கேட்ட விஜய்.! டி ஜி பி விளக்கம். !

கரூர்

நேற்று கரூர் கூட்டம் நடந்த இடத்தை விட.. சிறிய இடம் கேட்ட விஜய்.! டி ஜி பி விளக்கம். !

கரூர்: கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இரண்டு இடமுமே குறுகிய இடம் என்று தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் விளக்கம் அளித்து உள்ளார்.

இது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த நிலையில் இது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கரூரில் நடைபெற்றது மிகவும் துயரத்தக்கமான விஷயம். தற்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஆண்கள் 12, 16 பெண்கள், ஐந்து ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என பத்து குழந்தைகள் இறந்துள்ளனர்.

டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடனடியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தலைமையில் மூன்று ஐஜி கல் இரண்டு டிஐஜிக்கல் 10 எஸ்பிக்கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர்கள் கூறியதை விட கூட்டம் அதிகமா வந்ததை மனதில் வைத்துக் கொண்டுதான் தற்போது கரூரில் பெரிய இடம் அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.

இதே இடத்தில் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்பரை செய்துள்ளது. பத்தாயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் 27 ஆயிரம் பேர் கூடி உள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்திய இடத்தில் 500 காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்தனர்.

முக்கியமாக குறிப்பிட விஷயம் என்னவென்றால் மதியம் மூன்று இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 11 மணியிலிருந்து சேர்ந்த கூட்டம் விஜய் இரவு 7:40க்கு தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதுவரை அங்கு சேர்ந்த கூட்டத்திற்கு போதுமான தண்ணீர் உணவு வழங்கப்படவில்லை. இதுதான் உண்மை.

கூட்டம் அவரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. விஜய் அவர்களே காவல்துறையை பாராட்டினார். கத்தி தொண்டர்கள் முறையாக கூட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று நாம் முன்னரே அவர்களுக்கு நிபந்தனை விதிக்கிறோம்.

ஆனால் 27 ஆயிரம் கூட்டத்திற்கு எதிர்பார்த்து காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. இந்த துயரமான சம்பவம் எதனால் நடந்தது என்பது விசாரணை கூறியது அதற்கான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அது பற்றி தற்போது பேச முடியாது என தெரிவித்தார்.

புகைப்பட ஆதாரம்

இது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. கரூர் உழவர் சந்தை பக்கம் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புகைப்படம் மேலே உள்ளது. இது இரண்டு வழி சாலை. குறுகிய இடம். இதைத்தான் விஜய் கேட்டுள்ளார்.

கீழ இருப்பது நேற்று கூட்டம் நடந்த இடம். விஜய் பேசிய இடம். அது பெரிய சாலை. 4 வழி சாலை, கூடுதலாக நிறைய வெற்றிடம் உள்ள சாலை. நேற்று மட்டும் விஜய் கேட்ட கரூர் உழவர் சந்தை பக்கம் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்திருந்தால்.. இதைவிட பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும் அபாயங்கள் உள்ளன.