கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர்பரிதா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! சுய லாபத்திற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கண்டனம். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர்பரிதா நவாப்பின் நேர்மையான பணிகளை நகர மக்கள் மறக்க மாட்டார்கள். சுய லாபத்திற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக திமுக கட்சியை சேர்ந்த திருமதி சேர்ந்த பரிதா நவாப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நகர் மன்றத் தலைவர் திருமதி பரிதா நவாப் அவர்களில் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி இல்லை எனக் கூறி 23 வார்டு உறுப்பினர்கள் போர் கொடி தூக்கி உள்ளனர்.
இதனால் நகர மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டப்பணிகள் செய்ய முடியாத நிலை இருந்து வருவதாக நகர் மன்ற
தலைவர் திருமதி பரிதா நாவாப் மீது குற்றம் சாட்டி வந்த நிலையில் திடிர்ரென 23 வார்டு உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நகர்மன்ற உறுப்பினர்கள் 23 பேர்களும் கையெழுத்திட்ட நகலை நகராட்சி ஆணையர் சதிஷ்குமாரிடம் கொடுத்து உள்ளனர்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாக்டர் சந்திரமோகன் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு அதிகப்படியான காண்ட்ராக்ட் வேலை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மெட்ரோ பஜார் உள்ள கடைகளின் வரிகளை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை எங்களுக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
இதற்கெல்லாம் நகர்மன்றத் தலைவர் திருமதி பரிதா நவாப் செவிக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நகர்மன்ற உறுப்பினர்கள் 23 பேர் நகராட்சி ஆணையாளரை சந்தித்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்து அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதை நகர மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நேர்மையாக செயல்பட்ட நகர் மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆகவே இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் அவர்களும்
உள்ளாட்சி துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும், நகராட்சி ஆணையளரும், நகர்மன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாக அழைத்து சரியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நகராட்சி ஆணையாளர் சதிஷ் குமாரிடம் கோரிக்கை மனுவினை அவர் கொடுத்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ