வருவாய்துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் .!

கிருஷ்ணகிரி

வருவாய்துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் .!

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், உரிய கால அவகாசம் அளிக்க கோரி மற்றும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பிரச்சார செயலாளர் திரு. கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக FERA -  தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த  19.09.2025 அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது  கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

1) மாநில மைய முடிவின்படி, தருமபுரி மாவட்டத்தில் 25.09.2025 முதல்  'உங்களுடன் ஸ்டாலின் முகாமில்' அனைத்து FERA  உறுப்பினர்களும் (கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை,  புல உதவியாளர், நில அளவர் முதல் ஆய்வாளர் வரை) எவரும் கலந்துக் கொள்வதில்லை.

2) மாவட்ட / வட்ட தலைநகரில் 25.09.2025 அன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் "மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில்", கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை,  புல உதவியாளர்,நில அளவர் முதல் ஆய்வாளர் வரை அனைத்து நிலை அலுவலர்களும் விடுதலின்றி திரளாக பங்கேற்றல்.

3) மாவட்ட தலைநகர் (மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்) காத்திருப்பு போராட்டத்தில் தருமபுரி வட்டக்கிளை மற்றும் மாவட்ட ஆட்சியரக கிளையில் பணிபுரியும் FERA கூட்டமைப்பில் உள்ள அனைத்து நிலை அலுவலர்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் எனவும், எஞ்சியுள்ள 6 வட்டக்கிளைகளில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யபட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கனவே முடி செய்யப்பட்டபடி இன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் சிவதாஸ் வட்டத்தலைவர் தனசேகர் வட்ட செயலாளர் சிலம்பரசன்  மற்றும் வருவாய் துறை அலுவலர் சங்கம் வட்ட செயலாளர் இளவரசன், தாசில்தார் மனோகரன், தனி வட்டாட்சியர் செந்தில், நில அளவை ஒன்றினைப்பு முன்னால் மாவட்ட செயலாளர் பொன் அரிகரசுதன் , கோட்ட பொறுப்பாளர் ராகவேந்திர பிரபு , பிரபாகர் மற்றும் கிராம உதவியாளர் சங்கம் திருமால், லட்சுமணன் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.

செய்தியாளர்

மாருதி மனோ