கட்டிகாணப்பள்ளி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டம் .!
கிருஷ்ணகிரி
கட்டிகாணப்பள்ளி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டத்தில் அனைவருக்கும் சுத்தமான சுகாதரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டிக்காணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மங்கை நகரில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களான
சிவப்பிரகாசம் மற்றும் உமாசங்கர், துணை வட்டார வளர்சி அலுவலர் ராஜுவ் ஆகியோர் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் ஜெயகுமார் முன்னிலையில் வகித்தார்.

இந்த கூட்டத்தில் தாழ்வான மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அவ்விடங்களில் மழைநீர் தடைபடாமல் செல்லும் வகையில் வழியேற்ற வேண்டும்,
புயல் பாதுகாப்பு மையங்களை முறையே சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்தல் வேண்டும். மேலும் புயல் பாதுகாப்பு மையங்களில் குடிநீர் வசதி, மின் வழக்கு வசதி மற்றும் கழிப்பிட வசதி போன்றவற்றை முறையே பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கப்பட வேண்டும், கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யப்பட வேண்டும். தேவையான மணல் மூட்டைகள் சவுக்கு கட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருத்தல்......
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த கிராம சபைக்கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
