கிருஷ்ணகிரி மாவட்டம், அபய நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம், தேர் இழுத்து பக்தர்கள் வழிபாடு.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், அபய நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம், தேர் இழுத்து பக்தர்கள் வழிபாடு.!

கிருஷ்ணகிரி மாவட்டம், அபய நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம், தேர் இழுத்து பக்தர்கள் வழிபாடு.!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த அபய நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 10 ஆம் தேதி துவங்கியது.

தேர் திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு வாகன உற்சவம் நடைபெற்று வந்தது. இன்று தேர் இருக்கும் நிகழ்ச்சி நடந்தது அப்போது உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. அதிமுக கொள்கை பரப்பு செயலாளர்  தம்பிதுரை எம் பி, மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. 

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ஜெயபால், மற்றும் கமிட்டி நிர்வாகிகள், செய்திருந்தனர், அர்ச்சகர் ராமமூர்த்தி, மற்றும் நிகழ்ச்சியில் STRR ரோட்  விவசாயி சங்க தலைவர் முனிவன் வெங்கடப்பா , செயலாளர் அருள்ராஜ், துணைத் தலைவர் அமரேஷ் பொருளாளர் முரளி, மற்றும் அதிமுக தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், ஏ டி எம் கே மாவட்ட துணை செயலாளர் மகன், சிவலிங்கம் சுரேஷ், மோரனப்பள்ளியில் ஊர் பொதுமக்கள், ஓசூர் சுற்றுப்புற கிராம மக்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ