கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் போக சாகுபடிக்கு தேவையான யூரியா கிடைக்காமல் விவசாயிகள் வேதனை.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் போக சாகுபடிக்கு தேவையான யூரியா கிடைக்காமல் விவசாயிகள் வேதனை, விவசாயத்திற்கு தேவையான யூரியா உரம் கிடைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே ஆர்.பி. அணை, கெலவரப்பள்ளி மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் விவசயிகள் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து உள்ளனர்,
மேலும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் அரசு மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான உரங்களை தடையின்றி வழங்கப்பட்டு வந்தது,
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாயத்திற்கு போதுமான யூரியா கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் கலக்கமடைந்து உள்ளனர்,
மேலும் மத்திய அரசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு யூரியா மிக குறைந்த அளவில் அனுப்பட்டு இருப்பதால் மிகப்பெரிய அளவில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதனால் நெற்பயிருக்கு தேவையான யூரியா உரம் கிடைக்காததால் உரக்கடைகளில் விவசாயிகள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்....
அணைகளில் போதுமான தண்ணீர் இருந்தும், பயிருக்கு தேவையான யூரியா கிடைப்பது மிகவும் கஸ்டமாக உள்ளது. மிக குறைந்த அளவில் மட்டுமே யூரியா வருவதால் எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்காதால் யூரியாவை ஒரு சில உரக்கடைகளில் அதிக விலைக்கும் விற்பனை செய்யும் அவலமும் ஏற்பட்டு உள்ளது.
இதனை சம்மந்தப்பட்ட வேளாண்மை உரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், குறிப்பாக சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் பூக்கும் பருவத்தில் உள்ளது. இந்த பருவத்தில் பரவலாக யூரியா உரம் போட்டால் மட்டுமே மகசூல் கிடைக்கும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முதல் போக சாகுபடிக்கு தேவையான யூரியாவை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ