சாம்பவர் வடகரையில்  ஹரி டிரஸ்ட் சார்பில் ஆம்புலன்ஸ்  சேவை .!

தென்காசி

சாம்பவர் வடகரையில்  ஹரி டிரஸ்ட் சார்பில் ஆம்புலன்ஸ்  சேவை .!

சாம்பவர் வடகரையில் 
ஹரி டிரஸ்ட் சார்பில் ஆம்புலன்ஸ்  சேவை 

கிருஷ்ணமுரளி எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தென்காசி, செப் - 27

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையை தலைமையிடமாகக் கொண்டு தென்காசி பாவூர்சத்திரம் ஆலங்குளம் உள்ளிட்ட 12 இடங்களில் ஹரிபிரியாணி கடைகளை நடத்தி வரும் நிறுவனர் ஹரிஹர செல்வன்  தான் நடத்தி வரும் ஹரி டிரஸ்ட் சார்பில் சாம்பவர் வடகரை பாவூர்சத்திரம் ஆலங்குளம் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஏற்பாடு செய்துள்ள புதிய ஆம்புலன்ஸ் சேவையை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி (எ,) குட்டியப்பா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம்  சாம்பவர் வடகரை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி மூன்று ஊர்களுக்கும்  விபத்தில் சிக்கி தவிக்கும் பொது மக்களுக்கு அவர்களது உயிர் காக்கும் வகையில் உடனடியாக உரிய சிகிச்சை வழங்கிட முதற்கட்டமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கிட முடிவு செய்தார். 

அதன்படி நேற்று ஹரி டிரஸ்ட் வழங்கும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா சாம்பவர் வடகரை ஹரி டிரஸ்ட் சார்பில் அருள்மிகு ஸ்ரீ ராமசாமி திருக்கோயில் வளாகத்தில்நடை
பெற்றது .  இந்து நாடார் உறவின் முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை வகித்தனர், அதிமுக அவைத் தலைவர் மூர்த்தி , சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்றத் தலைவர் சீதாலட்சுமி முத்து ,ஐயப்பன், ஆகியோர் முனனிலை வகித்தனர்,  சுப்பிரமணியன் என்ற கொற்கை பாண்டியன், முப்புடாதி, சுதாஹரிஹர செல்வன், பரதன், பிரதிங்கா குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர், ஹரி பிரியாணி கடைகளின் உரிமையாளர் ஹரிஹர செல்வன்,   வரவேற்றார். 

 தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், தொடக்க உரையாற்றினார், 

 கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா சிறப்புரையாற்றி . புதிய ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்,

இந் நிகழ்ச்சியில்  பொய்கை மாரியப்பன், பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன், சுரண்டை தொழிலதிபர் எஸ்.வி.கணேசன்,  முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட  திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாபன், சுரண்டை சேர்மன் வள்ளி முருகன், அரசு மருத்துவர்கள் ராஜ்குமார், செந்தில்குமார், நாடார் மகாஜன சங்க மண்டல செயலாளர் மதன்  சுப்பிரமணியன், தெட்சணமாறநாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாஸ், தினமலர் நிர்வாக இயக்குனர் தினேஷ், சமூக நல ஆர்வலர் வெங்கடாம்பட்டி பூ.திருமாறன், டாக்டர்  ஏகலைவன், வேலவன் குரூப்ஸ் காமராஜ்,  கோல்டன் செல்வராஜ், எஸ்.கே.டி.பி காமராஜ், வழக்கறிஞர் ராஜன் ஆசிர்வாதம், சீனிவாசன்,ஸ்டீபன் நாடார், எஸ்.பி.கண்ணன், பாலசுப்பிரமணியன், பாலமுருகன், ஜெயக்குமார், நாராயண சிங்கம், அருணோதயம்,  சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்