மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம், காவல்துறை தடையை மீறியதால் தள்ளுமுள்ளு .!

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம், காவல்துறை தடையை மீறியதால் தள்ளுமுள்ளு .!

முற்றுகையிட முயன்ற 300 க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார் .

கோவை வடக்கு மாவட்டம் காரமடை காளம்பாளையம் ஆஷூர்கானா பள்ளிவாசல் , புஜங்கனூர் வக்பு வாரியத்தின் சொந்தமான இடத்தின் ஆவணங்கள் இருந்தும் ,  முஸ்லிம் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் வருவாய்த்துறை கண்டித்து , தமுமுக சார்பாக மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் தமுமுக கோவை வடக்கு மாவட்ட தலைவர் M.அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் தமுமுக தலைமை பிரதிநிதிகள் கோவை சாதிக் அலி , AK சுல்தான் அமீர் , தலைமைக் கழக பேச்சாளர் கோவை செய்யது , தமுமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் நாசர் , மமக மாவட்ட செயலாளர் முஹம்மது அப்பாஸ் , தமுமுக மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி , தமுமுக கோவை மத்திய மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ,மமக மத்திய மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மத்திய மாவட்ட துணை தலைவர் TMS அப்பாஸ்,  கோவை தெற்கு மாவட்ட தலைவர் கபூர் , திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் நசீர்தீன் , மாவட்ட செயலாளர் அபுசாலி , திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் கய்யூம், ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் , ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் , நீலகிரி மாவட்ட தலைவர் அபுதாஹிர் , சத்தியமங்கலம் தாஜ் , கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் சிராஜுதீன் , முஹம்மது சேட் , பக்கீர் முகமது சேட் , அன்னூர் சாகுல் ,  மேட்டுப்பாளையம் தமுமுக நகர செயலாளர் உமர் முக்தார், மமக நகர செயலாளர் யாசர் அரபாத், தமுமுக நகர பொருளாளர் பாசில் ,  ஆசூர்கானா பள்ளிவாசல் தலைவர் சையது இப்ராஹிம் , செயலாளர் முபாரக் அலி , ரிஜ்வான் பாஷா , சித்திக் பாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர் .

மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் தமுமுக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் , ஜமாத்தார்கள் என  300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் .

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தமுமுக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும்  ஜமாத்தார்களுக்கும் தமுமுகவினர் நன்றி தெரிவித்தனர்.