அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (IJU) தேசிய செயற்குழு கூட்டம் .!
IJU

அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (IJU) தேசிய செயற்குழு கூட்டம் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரில் இன்று 04.10.25 தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளின், இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர் சங்கங்களின் தேசிய குழு உறுப்பினர்கள், அனைத்து மாநில பத்திரிக்கையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா, ராஜஸ்தான் மாநில நிதி ஆணையத் தலைவர் டாக்டர் அருண் சதுர்வேதி, ராஜஸ்தான் அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் சுயாட்சித் துறை இணை அமைச்சர் ஜபர் சிங் கர்ரா, ஜெய்ப்பூர் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர்கள், பத்திரிக்கையாளர் சங்கங்களின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் (TUJ) சார்பில் தலைவர் தோழர் D.S.R. சுபாஷ், மூத்த பத்திரிக்கையாளர் M.D. ராமலிங்கம் ஐயா, தேசியக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் காயல் அகமது சாகிபு, மருத்துவர் K.S. சுப்பையா பாண்டியன், புதுச்சேரி மாநில பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் M.P. மதிமஹாராஜா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் துவக்கத்தில் மறைந்த ஐயா கு.வெங்கட்ராமன் அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
செய்தியாளர்
மாருதி மனோ