கிருஷ்ணகிரி மாவட்டம், வே. மாதேப்பள்ளி கிராமத்தில் விவசாயிகள் சங்கம் மற்றும் அம்பேத்கர்  வளர்கல்வி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், வே. மாதேப்பள்ளி கிராமத்தில் விவசாயிகள் சங்கம் மற்றும் அம்பேத்கர்  வளர்கல்வி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .!

கிருஷ்ணகிரி மாவட்டம், வே. மாதேப்பள்ளி கிராமத்தில் விவசாயிகள் சங்கம் மற்றும் அம்பேத்கர்  வளர்கல்வி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இருளர் பழங்குடி மக்கள் 1000 பேருக்கு நலத்திட உதவிகளை வட்டாட்சியர் சின்னசாமி வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள வே.மாதேப்பள்ளி கிராமத்தில் தொழிலாளர் நல வாரிய சங்கம், விவசாயிகள் சங்கம் மற்றும் அம்பேத்கர் வளர்க்கல்வி அறக்கட்டளை சார்பில்  இருளர் பழங்குடி மக்கள் 1000 பேருக்கு நலதிட்ட உதவி வழங்கும் விழா சங்கத்தின் மாநில தலைவர் தி.க.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னபையன்,  விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், டாக்டர் கணேசன், சண்முகம், மாவட்ட விவசாய அணி மாவட்ட பொருளாளர் மகபூப் அலி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவின் போது வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்னும் மலைசார்ந்த குகை போன்ற பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இன்றி இன்றும் வசித்து வரும் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட குடியிருக்க வீடு, பழுதான வீடுகளை இடித்து விட்டு புதியதாக தொகுப்பு வீடுகள், சாலை வசதி, இலவச வீட்டு மனைப் பட்டாக்களும் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் இந்த விழாவில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இத்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாராக கலந்துக் கொண்ட
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சின்னசாமி, பத்மனாபன், ஒய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் பொன்.ஜெயராமன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டு வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி, இருளர் பழங்குடி மக்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு புடவைகள், போர்வைகள், வேஸ்டிகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், டிபன் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்த விழாவின் போது மாவட்ட பொறுப்பாளர்களான சிவகுமார், லட்சுமனன், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெவினா, மாவட்ட செயலாளர் சுகுணா, மாவட்ட பொருளாளர் பத்மாவதி, ஒன்றிய செயலாளர் சந்தியா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ