ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தல் மூன்று பேர் கைது. 100 கிலோ கஞ்சா பறிமுதல்.!
கிருஷ்ணகிரி

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தல் மூன்று பேர் கைது. 100 கிலோ கஞ்சா பறிமுதல்.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா தொடர்ந்து கடத்தி வருவதாக குற்றச்சாட்டை எடுத்து வரும் நிலையில் இன்று கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, போலீசார் கிருஷ்ணகிரி, குப்பம் செல்லும் சாலையில் குருவிநாயனபள்ளி அருகே, சென்னை பள்ளி என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாட்டா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்தக் காரில் 100 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
மேலும் காரில் இருந்த மதுரை மாவட்டம், அய்யப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளை பாண்டி, ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த வேணுகோபால், ஹரி கிருஷ்ணா என மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ