நுகர்வோர் பாதுகாப்பு, உணவு கலப்படம் நுண்ணூட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், பேரிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, உணவு பாதுகாப்புத் துறை, மாவட்ட சுகாதாரத்துறை என இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு, உணவு கலப்படம் நுண்ணூட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் முன்னிலையில், சுகாதார துறையின் சுகாதார ஆய்வாளர் வினோத் அயோடின் நுண்ணூட்டச் சத்து பற்றிய முக்கியத்துவம் குறைபாடு இருப்பின், நோய் உபாதைகள் போன்றவற்றை கூறி, உண்ணக்கூடிய உணவில் உப்பில் அயோடின் நுண்ணூட்டச் சத்து சோதனை செய்வதை விளக்க முறையுடன் சோதனை செய்து காண்பித்தார்.


இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையின் உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.முனிராஜ் இன்றைய நாளில் உணவில் பல்வேறு கலப்படங்கள் சிந்தடிக் மெட்டீரியல்கள், செயற்கை தயாரிப்பு நிறமிகள், உணவு பாதுகாப்பு துறையால் தடை செய்யப்பட்ட நிறமிகள், சுவையூட்டிகள் மற்றும் மற்றும் பதப்படுத்தக்கூடிய வேதிப்பொருள்கள் போன்றவற்றை தேதி, தொடர்பு எண், உணவில் உட்பொருட்கள், காலாவதி, எடை சைவம் -அசைவம், தயாரிப்பாளர் முகவரி, தொடர்பு எண் போன்ற 12 பட்டியல்கள் கொண்ட விபரங்கள் குறிப்பிட்ட உணவு பொட்டலங்களில் இருக்க வேண்டும்.
இவற்றில் புகார்கள் இருப்பின் உணவு பாதுகாப்பு துறையின் புகார் எண். 9444042322 எண்ணிலும், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை செயலிலும், புகார்களை தெரிவித்தால் 24- மணி நேரத்திற்கு உள்ளாக புகார்கள் கண்டறியப்பட்டு நிவாரணம் பெறப்படும் என்பதையும் குறித்து பேசினார்.
இதனை தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ஏஜி.ஜாய் அவர்கள் பேசுகையில்.....
நுகர்வோர் பாதுகாப்பு குறித்த வரலாறு, சட்டங்களின் முக்கியத்துவம், முகப்பு போன்ற விவரங்களுடன் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய பண -மதிப்பு எல்லை விவரங்கள் மாவட்ட,மாநில, தேசிய ஆணையங்களின் விவரங்கள் வழக்கு முறையீடுகள், செயல்முறைகள், தீர்ப்புகள், நிவாரணங்கள் மற்றும் சமரசம் போன்ற அனைத்து விவரங்களையும் மாணவ, மாணவிகளுக்கு புரியும் வகையில், விளக்கி பேசினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே புரிதல் விவரங்கள் கேட்டறிந்து, ஆசிரியர் பெருமக்கள் நன்றி பாராட்டினர்.
தொடர்ச்சியாக, இந்த பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் செயல்படுத்த வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டனர்.
நிறைவாக, மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களுக்கும், நன்றி கூறி நிறைவுற்றது.
செய்தியாளர்
மாருதி மனோ
