கிருஷ்ணகிரியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து  திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து  திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

கிருஷ்ணகிரியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து  திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரில், மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அமைதி பூங்காவான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பும் தமிழ்நாடு ஆளுநர்  ஆர் என் ரவியை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் கோ. திராவிடமணி தலைமை வகித்து பேசினார். மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்று பேசினார்.
 
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக துணை தலைவர் வ.ஆறுமுகம்,மாவட்டத் துணைச் செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி முருகேசன்,  இல.ஆறுமுகம், நகரத் தலைவர் கோ. தங்கராசன், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனி முத்து ராஜேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

தருமபுரி மண்டல திராவிடர் கழக மேனாள் தலைவர் பழ. வெங்கடாசலம் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மேனாள் செயலாளர் கா.மணிக்கம், மாவட்ட ப.க. துணை தலைவர் வேடியப்பன், காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம், ஒன்றிய செயலாளர் பெ.செல்வேந்திரன், பர்கூர் ஒன்றியத் தலைவர் மே. மாரப்பன், மத்தூர் ஒன்றிய தலைவர் சா. தனஞ்செயன், ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் அண்ணா அப்பாசாமி,  மாவட்ட மாணவரணி தலைவர் இர.அஜய் குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராஜேந்திர பாபு மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி. ராசா ராமாபுரம் ரஞ்சித் சி.யுவான் உள்பட கழகத்தோழர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீது அவதூறுப் பிரச்சாரத்தை பரப்பும் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இறுதியில் கிருட்டினகிரி நகரச் செயலாளர் அ.கோ.இராசா நன்றி கூறினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ