வழிபறி கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் இருவரை கைது செய்த காவல் துறையினர். !
மேட்டுப்பாளையம்
வழிபறி வழக்கில் பெண்கள் இருவர் கைது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து வன பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் பேருந்தில் தனது உறவினர்களை பார்க்க கூடலூரைச் சேர்ந்த பாரத் செல்வி என்பவர் பயணித்துள்ளார்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாரத் செல்வி நின்று பயணித்துள்ளார். உடன் இரண்டு பெண்கள் பாரத் செல்வியின் மீது கூட்டத்தில் உரசுவது போல் உரசியுள்ளனர்.
இதனை உணராத பாரத் செல்வி சத்திய மூர்த்தி நகர் ( SM நகர் ) பேருந்து நிறுத்தம் வந்த போது நடத்துனரிடம் டிக்கெட் கேட்டு பணத்தை எடுக்க கைப் பையை திறக்க முயன்ற போது ஏற்கனவே கைப்பை திறந்த நிலையில் இருந்துள்ளதையும், கைப்பையில் வைத்திருந்த பணத்தையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாரத் செல்வி நடத்துனரிடம் பேருந்தை நிறுத்துமாறும்,தன் பணம் காணவில்லை என்பதையும் கூறியுள்ளார். உடனே பேருந்தை நிறுத்தும் போது பாரத் செல்வியின் பின்னால் உரசிக் கொண்டிருந்த இருவரும் வேக வேகமாக இறங்க பேருந்தில் உள்ளவர்களும்,பாரத் செல்வியும் பிடித்து விசாரித்ததில் பணத்தை எடுத்தது அஞ்சலி மற்றும் ரம்யா என்ற பெண்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் உடனே மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு S M நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் திருடிய பெண்களையும் பணத்தை பறி கொடுத்த பாரத் செல்வியையும் காவல் நிலையப் அழைத்து வந்தனர்.
மேலும் வழிபறி பெண்களை விசாரித்த போது ஏற்கனவே அஞ்சலி என்பவர் மீது திருப்பூர், திருநெல்வேலி முன்னீர் பள்ளம், தென்காசி கடையம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.மேலும் இரு பெண்களும் சேலம் இரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள டென்ட்டுகளில் தங்கியிருந்ததாகவும், தமிழ்நாட்டின் பல ஊர்களில் இது போன்ற கைவரிசை காட்டியுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னக் காமனன் தலைமையிலான காவல் துறையினர் அஞ்சலி மற்றும் ரம்யா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR)
