உணவகத்தில் புகுந்து ஐடி ஊழியர் பல் மருத்துவர் தம்பதியை தாக்கிய சிசிடிவி வெளியான நிலையில் தந்தை மகன் கைது
உணவகத்தில் புகுந்து ஐடி ஊழியர் பல் மருத்துவர் தம்பதியை தாக்கிய சிசிடிவி வெளியான நிலையில், தந்தை மகன் கைது.
சென்னை குரோம்பேட்டை கணபதிபுரம், பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள பிண்டு உணவகத்தில் ஜமீன் இராயப்பேட்டையை சேர்ந்த பல்மருத்துவர் புவனா(36), அவரது கணவர் ஐடி ஊழியர் அமுதன் இரண்டு குழந்தைகளுடன் நேற்றிரவு சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உணவகத்திற்குள் புகுந்த இருவரில் ஒருவர் அமுதனை கைகளால் சரமாறியாக தாக்கினார் அவரது மனைவி தடுக்க முயன்றும் அவர் மீது தாக்குதல்கள் விழுந்தது. இதனையடுத்து இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இது குறித்து பல் மருத்துவர் புவனா சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இருவரையும் தேடி கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் குரோம்பேட்டையை சேர்ந்த மகேந்திரன்(38), மற்றும் அவரது தந்தை விஷாபாதாஸ்(70), என்பது தெரியவந்தது, ரேடியல் சாலையில் விஷாபாதாஸ் நடந்து சென்ற போது பல் மருத்துவர் மற்றும் ஐடி ஊழியர் சென்ற கார் உரசியதில் விஷாபாதாஸ் கீழே விழுந்ததாகவும் இதனை கவனிக்காமல் கார் சென்ற ஆத்திரத்தில், அவர் மகனிடம் கூற அவர் உணவகத்திற்கு அழைத்து சென்று தம்பதியை தாக்கியது தெரியவந்தது.
விசாரணைக்கு பின் இருவரையும் போலீசார் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
S S K