சிறுமியிடம் சில்மிசம் செய்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் போக்ஷோ சட்டத்தில் கைது. !
ஆம்னி பேருந்து

கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்னி பேருந்தில் நள்ளிரவில் டிரைவர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இருந்து சென்னைக்கு நேற்று வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்சில் பஸ்சை ஓட்டிய டிரைவர், தனக்கு பின் இருக்கையில் இருந்த சிறுமியை பார்த்து அநாகரிகமான செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. சிறுமியின் தாயார் தைரியமாக எடுத்த முடிவினால் விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷனில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த டிரைவர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி என தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இரவு நேரங்களில் சென்னையை நோக்கி சாரைசாரையாக ஆம்னி பஸ்கள் படையெடுப்பது வழக்கம்.
பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகள்
சொகுசான பயணம், டைமிங்கில் வண்டியை இயக்குவது ஆகியவற்றால் ஆம்னி பஸ்சில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்கிறார்கள். கட்டணம் கூடுதலாக இருந்தாலும் கூட பிற ஊர்களுக்கு செல்லாமல் பைபாஸ் சாலைகளில் பயணித்து விரைவாக சென்று விடுவதால், பயணிகள் ஆம்னி பஸ்களை அதிகம் நாடிச்செல்கிறார்கள்.
எனினும் ஆம்னி பஸ்களை கட்டுப்பாடு இன்றி அதிவேகத்தில் இயக்குவதாகவும் சாலை விதிகளை மதிக்காமல் செல்வதாகவும் பயணிகள் மத்தியில் அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. பயணக்கட்டணமும் வார இறுதியில் அதிக அளவில் இருந்தாலும் கூட வேறு வழியின்றி பயணிகள் செல்கிறார்கள். ஆனால் ஆம்னி பேருந்துகளின் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகள் அவ்வப்பொது நடைபெற்று வருவதாக பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
டிரைவர் செய்த காரியம்
இந்த நிலையில்தான் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்த பேருந்தில் நள்ளிரவில் டிரைவர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் ஞானவேல் என்ற டிரைவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு கேரளாவில் இருந்து சென்னைக்கு வழக்கம் போல பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கேரளாவை சேர்ந்த 9 வயது சிறுமியும் அவரது தாயாரும் பயணித்துள்ளனர்.
சிறுமி செய்த தைரியமான செயல்
டிரைவர் இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளனர். அப்போது, சிறுமியை ஆபாசமாக தனது செல்போனில் ஞானவேல் படம் பிடித்துள்ளார். இதை சிறுமி பார்த்துவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி மற்றும் அவரது தாயார், அநாகரிக செயலில் ஈடுபட்ட டிரைவருக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தனர்.பேருந்து விழுப்புரத்திற்கு வந்ததும், காவல் நிலையத்தில் பெண் புகராளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் டிரைவர் ஞானவேலை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.