கரூரில் இருந்து கள்ளத் தனமாக மணல் ஏற்றி வந்த 26 லாரிகளை சிறை பிடித்த டி ஐ ஜி. !

மணல் திருட்டு

கரூரில் இருந்து கள்ளத் தனமாக மணல் ஏற்றி வந்த 26 லாரிகளை சிறை பிடித்த டி ஐ ஜி. !

கரூர் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிச் சென்ற திமுக பிரமுகரின் 26 லாரிகளை சிறை பிடித்த திருச்சி சரக டிஐஜி வருண்குமார். 

திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்வதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் லாரிகளை சிறை பிடித்துள்ளார் டிஐஜி. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான காளியப்பன், அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவரைப் போல மற்றவர்களும் அமராவதி, காவிரியில் மணல் அள்ளி வந்தனர்.

இதனை போலீசார் தடுக்க முயற்சித்தாலும், "நாங்கள் மாட்டு வண்டியில்தான் மண் எடுக்கிறோம். எங்களை தடுக்கிறீங்க.. ஆனால் லாரியில் மணல் அள்ளும் திமுகவினர் லாரிகளை பிடிப்பதே இல்லையே" என குற்றம்சாட்டினர்.

இந்த பின்னணியில், அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க டிஐஜி வருண்குமார் நேற்று இரவே ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைத்தார். இந்த டீம் இன்று அதிகாலையில் அமராவதி, காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள வந்த லாரிகளை தடுத்து பறிமுதல் செய்தது.

திமுக பிரமுகர் காளியப்பனின் ஆட்கள் மணல் ஏற்றிவைத்ததாக கூறப்படும் 12 டிப்பர் லாரிகள், 14 மணல் இல்லாத காலி லாரிகள் மொத்தம் 26 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடி சம்பவம் திருச்சி சரகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் & விளம்பர தொடர்புக்கு

                  97 87 41 64 86