பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை காப்பாற்றச் சென்ற மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த குற்றவாளிகள். !

பீகார்

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் சிறுமியின் தாய் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிறுமியின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மருத்துவம் பார்க்கச் சென்ற மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர் குற்றவாளிகள்.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவைக் கையாண்டு RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், "பீகாரின் நிலை தற்போது தலிபான் ஆட்சியைவிட மோசமாக உள்ளது" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சமூக வலைதளமான X தளத்தில் பதிவிட்ட தேஜஸ்வி, யாதவ் "20 ஆண்டுகளாக நிலவும் NDA ஆட்சியில், போலீசும் நிர்வாகமும் குற்றங்களை தடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.

அதனால்தான் மக்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுத்து செயல்படுகின்றனர். முதல்வர் நிலை தெரியாமல் இருக்கிறார். அரசு உருப்படியாக செயல்படவில்லை. அதிகாரிகளும் அமைச்சர்களும் அரசுத் திட்டங்களை விட, மக்கள் பணத்தை கொள்ளைடிக்க அதிகம் ஈடுபட்டுள்ளனர்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், ஒரு வேறு சம்பவமாக, முஸாபர்பூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. மே 26 அன்று முஸாபர்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, பின்னர் பட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உயிரிழந்துள்ளார்.

இதற்கும் கடும் கண்டனம் தெரிவித்து தேஜஸ்வி கூறியதாவது: "முதல்வரும் துணை முதல்வர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க நேரமில்லாமல் அரசியல் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார்கள். மேலும் பீகாரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.