71 வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவில் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று 9 கோடியே 32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

71 வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவில் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று 9 கோடியே 32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரம் தனியார் திருமண மண்டபத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு பங்கு பெற்று கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 1063 பயனாளிகளுக்கு ரூபாய் 9 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.

மேலும் கூட்டுறவு வார விழா தொடர்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

மேலும் சிறந்த கூட்டுறவு சங்கங்கள் விற்பனையாளர்களுக்கு கேடயங்கள் வழங்கி சிறப்பித்து பேருரை ஆற்றினார்.

மேலும் 71 வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு அமைச்சர், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்,  சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கூட்டுறவு வார உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 பின்னர் பேசிய அமைச்சர் எ.வ வேலு தெரிவித்ததாவது...

வானில் இருக்கும் பல வண்ணங்களைப் போல கூட்டுறவு சங்கங்கள் அமைக்க வேண்டும்.  சங்கங்களில் இருப்பவர் அனைவரும் ஒன்று கூடி நன்மை பயக்குவதாக இருக்க வேண்டும் .  

பொதுவாக காக்கைகள் ஒன்று கூடி இருப்பதை பங்கிட்டு உண்டு சென்றுவிடும் அதைத்தான் கலைஞர் கூறுவார் காக்கைகள் கூடி கலைவதைப் போல கூட்டுறவு  சங்கங்கள் இருக்கக் கூடாது என்று.  

மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி மழை பெய்கிறது இதனால் விவசாயிகள் பயன் அடைகிறார்கள் எனவே மழை பொழியும் மேகங்கள் போல கூட்டுறவு சங்கங்கள் அமைய வேண்டும் என கலைஞர் அறிவுரை வழங்கினார்.

முதல் முதலாக கலைஞர் நியாய விலை கடைகளில் துவரம் பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கினார். அப்போது 65 ரூபாய் விற்ற பருப்பு 30 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.  

தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் 180 ரூபாய் விற்கப்படும் துவரம் பருப்பு 25 ரூபாய்க்கு வழங்கி வருகிறார். 

இதனால் அரசுக்கு எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் நாட்டு மக்களுக்காக 25 ரூபாயில் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழர்களின் நன்றியுணர்வு பண்பால் தான் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்... 

அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாநில பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஏவா வேலு பங்கேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளருக்கு பணி நியமன ஆணைகளை  வழங்கினார்.  சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்திருந்த வேலை வாய்ப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்தது. 

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி வில்வநாதன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன்   துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கு பெற்றனர்.

ந.வெங்கடேசன்