குழந்தைகளின் உயிரைப் பறித்த எலி மருந்து. Pest control நிறுவனத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை
சென்னை குன்றத்தூரில் கிரிதரன் பவித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விஷாலினி என்ற 6 வயது மகளும், சாய் சுதர்சன் என்ற 4 வயது மகனும் இருந்துள்ளனர்.
இவர்கள் சம்பவ நாளில் வீட்டில் ஏசி போட்டு தூங்கிய நிலையில் எலி மருந்து நச்சு காற்றில் பரவி குழந்தைகள் இருவரும் மூச்சுத்திணறி இறந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் எலியை கட்டுப்படுத்த மருந்து வைத்த pest control நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது தியாகராய நகரில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.