தென்காசியில் ஊரகவளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!
தென்காசி

தென்காசியில் ஊரகவளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தென்காசி, செப் - 25
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தலைவருமான ஆர். தங்கத்துரை தலைமை வகித்தார். மாநில மக்கள் நல பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வே. புதியவன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்
ஆர்.ராமநாதன் 16 அம்ச கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தூய்மை பணியாளர்களின் மாதாந்திர ஊதியம் ரூபாய் 10, ஆயிரம் வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற தவறினால் வரும் அக்டோபர் 29ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் அனைத்து ஊழியர்களும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திடவும், வரும் நவம்பர் 24ஆம் தேதி தொடர் கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட தலைவர் தங்கத் துரை, ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்
ராமநாதன், மாநில மக்கள் நல பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்
புதியவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் மக்கள் நலப் பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கணினி உதவியாளர்கள் சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் கிராம சுகாதார ஊக்குனர்கள் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்