முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை. !
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான, ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான Y.பிரகாஷ்.,MLA, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் அரசுதுறை சார்ந்த அலுவலர்கள், மாநில, மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ