பேருந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய நபரை கைது செய்த காவல் துறையினர். !
சிறுமுகை

சிறுமுகை அடுத்துள்ள வெள்ளி குப்பம்பாளையம் பகுதியில் தனியார் மினி பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் ஆண்ட்ரூ அரவிந்த் (29), த/பெ. சிவமணி, காரமடை என்பவரை அடையாளம் தெரியாத நபர் பேருந்தில் ஏறி அறிவாளால் வெட்டியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் தகவலின் அடிப்படையில் சிறுமுகை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அறிவாளால் வெட்டிய நபரை பற்றி விசாரணை செய்ததில் அந்த நபர் சிறுமுகை பழைய காரமடை ரோடு பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர் மகன் காந்தராஜ் (29) என தெரிய வந்துள்ளது.
காவல்துறையினர் காந்தராஜை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.