அதிமுக முன்னாள் கவுன்சிலர், சூளகிரி முன்னாள் சேர்மன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.!

கிருஷ்ணகிரி

அதிமுக முன்னாள் கவுன்சிலர், சூளகிரி முன்னாள் சேர்மன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.!

அதிமுக முன்னாள் கவுன்சிலர், சூளகிரி முன்னாள் சேர்மன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சூளகிரி அருகே உள்ள மருதாண்டப்பள்ளி ஊராட்சி ஒட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அதிமுகவின் சூளகிரி  கிழக்கு ஒன்றிய மீனவரணி தலைவர் ரமேஷ் அவர்கள் தனது ஆதரவாளர்கள் 200 க்கும்  அதிகமானோர் குடும்பத்துடன் முன்னாள் சூளகிரி சேர்மன் மது என்கிற ஹேம்நாத் முன்னிலையில் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - திமுகவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற ரமேஷ் அதிமுகவின் தீவிர விசுவாசியாகவே வலம் வந்தார். இந்த நிலையில் அவர் தவெகவில் இணைந்தது, அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது..

புதியதாக கட்சியில் இணைந்தவர்களை சூளகிரி முன்னாள் சேர்மன்கள் மது என்கிற ஹேம்நாத், திருமதி லாவண்யா ஹேம்நாத் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை அணிவித்தும் விசில்களை வழங்கி வரவேற்றனர். அப்போது சூளகிரி மத்திய ஒன்றிய செயலாளர் பிரசாந்த், லிங்கராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், வெங்கடேஷ், சந்தோஷ், ஹரிஷ் குமார், பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ