பேரூராட்சி நிர்வாகம் 6-வது நிதி குழும மானியம் 2025-2025 ஆண்டு ஆறு வகுப்பறை கொண்ட கட்டிட திறப்பு விழா .!

கிருஷ்ணகிரி

பேரூராட்சி நிர்வாகம் 6-வது நிதி குழும மானியம் 2025-2025 ஆண்டு ஆறு வகுப்பறை கொண்ட கட்டிட திறப்பு விழா .!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற  தொகுதிகுட்பட்ட,பர்கூர் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி நிர்வாகம் 6-வது நிதி குழும மானியம் 2025-2025 ஆண்டு ஆறு வகுப்பறை கொண்ட கட்டிட திறப்புவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்.,MLA அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி  பள்ளி பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 

உடன் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ,மாணவிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ