ஓசூரில் மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபி யின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி .!
கிருஷ்ணகிரி

ஓசூரில் மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபி யின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஆந்திர சமிதி மண்டபத்தில் ஜெயப்பிரியா இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாடகர் பரந்தாமன் ஏற்பாட்டில், ஜெயப்பிரியா இசைக்குழு சார்பில் டாக்டர் பிரபல திரை இசை பாடகர் மறைந்த எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மருத்துவர் அம்பிகா பாரி, ஓசூர் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன், பிரபல பாடகர் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ், காமெடி நடிகர்கள் கிங்காங், பாவா லக்ஷ்மணன் மற்றும் விஜய் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜீவா, ஜான்சி, ஸ்மிதா, செல்வி, மோகனா சுப்பிரமணி, பிரகாஷ், சரவணன், செல்வன், தேவாம்ஸ் உள்ளிட்ட பாடகர்கள் மற்றும் பாடகிகள் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பாக இசை நிகழ்ச்சியில் பாடல்களை பாடினர்.
ராஜ கோபாலன் , சிந்து அனூப் சுமா யாதவ், கவிதா, ஷங்கர், ராதா, பாலா அவர்களின் சிலம்பாட்டம் குழு மூர்த்தி, பூபதி, சுபாஷினி அவர்களின் சந்துரு, கிஷோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ