சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2024-25 (ரூ.2,25,000) மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேடை அமைக்கும் பணி.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி உட்பட்ட சூளகிரி வட்டம். அங்கொண்டப்பள்ளி பஞ்சாயத்து கோட்டங்கரை கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2024-25 (ரூ.2,25,000) மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேடை அமைக்கும் பணிக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி எம்எல்ஏ பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாபு வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாதேஷ், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் யசக்ஞானம் ஆர்கேட்டி, ஆசிரியைகள் சி.அமராவதி, சுதாராணி, வெங்கட்டராஜூ, கலாவதி, ஒப்பந்ததாரர், மஞ்சுநாத், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ