கற்போம் கற்பிப்போம் சேவை மையம் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் கூட்டம் .!

கிருஷ்ணகிரி

கற்போம் கற்பிப்போம் சேவை மையம் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் கூட்டம் .!

கற்போம் கற்பிப்போம் சேவை மையத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வில் பி.சேகர் மீண்டும் தலைவராக ஒருமனதாக தேர்வு.

கற்போம் கற்பிப்போம் சேவை மையம் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் கூட்டமான உறவுகளின் சங்கமம் நிகழ்வு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் அரங்கில் அமைப்பின் தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பி. சேகர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாக சென்னை சேர்ந்த கே.ராஜா தலைமையில் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பி.சேகர் மீண்டும் மைய தலைவராக தேர்வானார். அவருக்கு நிர்வாகிகள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய  பகுதிகளில் உள்ள கிராமங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்கிலும், ஏழ்மை நிலையில் இருந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டியும், சுகாதாரம் பண்பாடு கலாச்சாரம் நல்ல ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மேலும் உறவுகளுடைய மகன் மற்றும் மகள்களுக்கு முறையான திருமண வரன்களை ஏற்படுத்தித் தருதல் போன்ற கருத்துக்களை உறவுகளின் சங்கம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், வரும்2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக கௌரவத் தலைவராக ஏ. ரங்கராஜ், செயல் தலைவராக எம்.காமராஜ், பொதுச்செயலாளராக எம். எஸ் ராஜன், பொருளாளராக எம்.நாகராஜன், துணைத் தலைவர்களான கே. ராஜா எம். துரைசாமி, துணை பொது செயலாளர்  கே.முருகன், தலைமை நிலைய செயலாளர்கே. பாரதி, பிரச்சார செயலாளர்எஸ். சஞ்சீவன், இளைஞர் அணி செயலாளர் எம்.மகேந்திரன், மகளிர் அணி செயலாளர் எஸ்.கலைவாணி, துணைச் செயலாளர் வாணி, தருமபுரி மாவட்ட தலைவராக சாக்கன், செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன்,பென்னாகரம் சி. கணேசன், வணக்கம். வி. பி. ஸ்ரீனிவாசன்,எம். முனிராஜ், அமைப்பு செயலாளர் மணிவண்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் டி.சுவாமிநாதன், உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்தனர். புதிய நிர்வாகிகளுக்கு  சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இறுதியில் துணை பொது செயலாளர் கே.முருகன் நன்றி உரையாற்றினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ