உச்சநீதிமன்ற நீதிபதி மீது செருப்பு வீசியவரை கண்டித்து ஒசூரில் தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். .!

கிருஷ்ணகிரி

உச்சநீதிமன்ற நீதிபதி மீது செருப்பு வீசியவரை கண்டித்து ஒசூரில் தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். .!

உச்சநீதிமன்ற நீதிபதி மீது செருப்பு வீசியவரை கண்டித்து ஒசூரில் தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 

உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஆர்.பி.கவாய் அவர்கள் மீது  செருப்பு வீச முயன்ற  ஆர் எஸ் எஸ் மதவெறி மனப்பான்மை கொண்ட  கயவனை கண்டித்து  கிருட்டினகிரி மாவட்டம்,  ஒசூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஓசூர் தந்தை பெரியார் சதுக்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒசூர் கழக மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் தலைமை வகித்துப்பேசினார்.

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி, ஒசூர் மாநகர துணை மேயர் திமுக ஆனந்தையா, திமுக பொறியாளர் அணி மாநில நிர்வாகி ஞானசேகரன் ஆகியோர் பேசினர்.

நிறைவாக திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்கள் கலந்துக்கொண்டு ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினார்.

செய்தியாளர்

மாருதி மனோ