தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 23 வது மாவட்ட பொதுக்குழு கூட்டம் .!

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 23 வது மாவட்ட பொதுக்குழு கூட்டம் .!

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 23 வது மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு செய்து திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் 23 வது மாவட்ட பொதுக்குழு கூட்டம், மற்றும் 2026 ஆம் ஆண்டு மாத நாட்காட்டி வழங்குதல், மற்றும் ஓய்வு பெற்ற ஓட்டுநர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொருளாளர் முருகன் தலைமை தாங்கினார். 
மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஆண்டி முன்னிலை வகித்தார். 

மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தீர்மானம் வாசித்தார். அந்தத் தீர்மானத்தில்,  
தேர்வு நிலை, சிறப்பு நிலை, முதுநிலை, ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை போக்கிட வேண்டும் ,

பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு செய்து திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் ,

அரசுத் துறையில் ஏற்பட்டுள்ள ஓட்டுனர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரந்தர ஓட்டுநர்களாக நிரப்பிட வேண்டும்,

ஏற்கனவே பணி புரியும் பணியிடங்களில் ஓட்டுநர்களின் தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நிரந்தர ஓட்டுநர்களாக பணி அமர்ந்திட வேண்டும்,

தகுதியும் விருப்பமும் உள்ள ஓட்டுநர்களுக்கு இளநிலை உதவியாளராக பணி மாறுதல் வழங்கிட அரசாணை பிறப்பிக்க வேண்டும், 

உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த யுவராஜ், சேகர், சுகாதாரத்துறையை சேர்ந்த வீரமணி, வெங்கடாசலம் நஞ்சாரெட்டி, வருவாய்த்துறை சிவக்குமார் ஆகிய ஓய்வு பெற்ற ஓட்டுநர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்கள். 

இந்த சிறப்பான கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவரும் மயிலாடுதுறை மாவட்ட தலைவருமான அன்பழகன், சிவகங்கை மாவட்ட தலைவர் லட்சுமண பெருமாள், மாவட்ட பொருளாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் முன்னிலையில் 2026-ம் ஆண்டுக்கான காலண்டரும் வெளியிடப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ